” புலிகளால் முடியாமல்போன ஈழக் கனவை அடைவதற்கு தமிழ் டயஸ்போராக்கள் முயற்சிக்கின்றனர். அதற்கான நகர்வுகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது.” – என்று தேசிய சுதந்திர
முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைப் பயன்படுத்தி தமது இலக்குகளை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இதன்காரணமாகவே ஜனாதிபதியுடன் கூட்டமைப்பினர் பேச்சு நடத்தியுள்ளனர்.
எதற்காக விசேட நிதியம் உருவாக்கப்பட வேண்டும்? ஈழம் என்ற இலக்கை அடைய வியூகம் வகுக்கப்படுகின்றது. இதற்காகவா எமது படையினர் உயிர்களை தியாகம் செய்தனர்? எனவே, கூட்டமைப்பு விரித்துள்ள சதிகார வலைக்குள் ஜனாதிபதி சிக்ககூடாது.” – என்றும் அவர் கூறினார்.
#SriLankaNews
Leave a comment