20 6
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Share

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டவை எனக்கூறப்படும் தங்க நகைகளை சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது மீட்கப்பட்டு புலனாய்வு பணிப்பாளர் சபையில் வைக்கப்பட்டுள்ள குறித்த தங்க நகைகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த நகைகளை தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பிச் சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...