உடன் அமுலுக்குவரும் வகையில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனவே, ரம்புக்கனை பகுதியில் வாழும் பொதுமக்கள் அமைதியாக வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரம்புக்கனையில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று மோதல் ஏற்பட்டது. இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேற்படி சம்பவத்தில் 8 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 24 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews