லொஹான் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரி! – வீரவன்ச புகழாரம்

49bd8b547ef08dc22b76ace42c2e4bdb XL76876878

லொஹான் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரி! – வீரவன்ச புகழாரம்

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தன் மேல் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ள சம்பவமானது நாட்டுக்கு முன்னுதாரணமான செயற்பாடாகும்,

இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளைஅச்சுறுத்தியதுடன் துப்பாக்கி முனையில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுக்காது, தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ள லொஹான் ரத்வத்த, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமை அவரது சிறந்த பண்பை எடுத்துக்காட்டுகிறது.

எமது நாட்டில் இதுவரை இவ்வாறு குற்றமிழைத்த எவரும் தாமாக முன்வந்து இவ்வாறான செயற்பாட்டை  இதற்கு முன்னர் மேற்கொள்ளவில்லை, எனவே அவரது இந்த செயற்பாடு பாராட்டத்தக்கது – என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version