முடங்குமா நாடு? – அரச உயர்மட்டம் ஆலோசனை

lockdown

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையால் நாட்டை ஒருவார காலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால், ஒருவார காலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளைச் சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் இது தொடர்பில் இன்று மாலை அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version