இலங்கைசெய்திகள்

சபுகஸ்கந்தவுக்கு பூட்டு

Share

நாட்டை வந்தடைந்து 10 நாட்களாக காத்திருக்கும் 2 மசகு எண்ணெய் கப்பல்களுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாமையால் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தினை இன்று முதல் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு போதியளவு அந்நியச் செலாவணி கிடைத்தவுடன் கடந்த 10 நாட்களாக காத்திருக்கு 100,000 MT ESPO மசகு எண்ணெய் சரக்கு இறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் பற்றாக்குறை இருக்காது எனவும் தெரிவித்தார். ஏனெனில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனைத்து தயாரிப்புகளின் போதுமான பங்குகளை கொண்டுள்ளது. மத்திய வங்கி சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான வாராந்த அந்நிய செலாவணி தேவைகளை கிடைக்கச் செய்துள்ளது.

 

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1669007454401 1646201449175
இலங்கைசெய்திகள்

சிவனொளிபாதமலை மண்சரிவு அபாயத்தைக் குறைக்க 6 முக்கிய பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

சிவனொளிபாதமலை செல்லும் ஹட்டன் நுழைவு பாதையின் ‘மஹகிரி தம்ப’ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமையை ஆராய்ந்து,...

image 1405e49d0e
இலங்கைசெய்திகள்

மல்வத்து ஓயா சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு!

அநுராதபுரம் மல்வத்து ஓயா ஆற்றில் தாயுடன் குதித்து காணாமல்போன இரண்டு குழந்தைகளில் ஒருவரான சிறுமியின் உடல்,...

images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...