நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்பட வாய்ப்புக்கள் உள்ளன தெரிவிக்கப்படுகிறது.
இவ் விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலக்கரி இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடே இதற்கு காரணம்.
நிலக்கரி இறக்குமதி செயற்பாட்டில் தடங்கல் ஏற்படுமாயின், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்படும்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் காணப்படும் நிலையில், நிலக்கரி இறக்குமதியில் ஏற்படுமாயின் குறித்த இயந்திரங்களை இயக்க முடியாது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்படுமாயின் அல்லது மட்டுப்படுத்தப்படுமாயின் நாட்டில் மிகப்பெரும் மின் நெருக்கடி ஏற்படும் – என்றார்.
#SriLankaNews