Ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் – மகாநாயக்க தேரர்கள் கடிதம்

Share

ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் மூலம் மக்களின் ஆணையை நிலைநாட்டுவது என்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அதற்கேற்ப நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும்  மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மல்வத்து  பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், மக்களின் சுமையைக் குறைப்பதற்கும், சமூக அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான கொள்கை அடிப்படையிலான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதை உறுதிசெய்வதில் அனைத்து பங்குதாரர்களும் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் புரிந்துகொள்வது அவசியம் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல், பணத்தை முறையாக நிர்வாகம் செய்து ஊழலை ஒழிக்கவும், பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், மக்கள் பிரதிநிதிகள் அனுபவிக்கும் வரம்பற்ற சலுகைகளை அகற்றவும், நடைமுறை தீர்வுகளின் மூலம் மக்களின் துன்பங்களைக் குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...