உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி பத்திரம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூராட்சி சபைகளின் கால எல்லை கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அதன் காலஎல்லையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்பதாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தி அதற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி நீடிக்கப்பட்டுள்ள கால எல்லை நிறைவடைவதற்கு முன்பதாக மூன்று மாதங்களுக்குமுன் தேர்தலை நடத்துவது தொடர்பில் அறிவிப்பை வெளியிடவேண்டியுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இம்முறை வாக்காளர் இடாப்பில் கையொப்பமிடுவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்க கையெழுத்திட்ட பின்னர் தேர்தல் நடத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
#srilanka news
Leave a comment