ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரதாக்கல் செய்த குறித்த மனு,
நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன, ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.
அதன்போது, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை என்றும் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தேர்தலுக்கான நிதியை திறைசேரி விடுவிக்காத காரணத்தினால் தேர்தலை நடத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவித்தார்.
நிதி வழங்குவது தொடர்பில் விளக்கமளித்ததுடன், மேலும் நிதி வழங்குவதற்கு ஆலோசனைகள் அவசியம் என்று திறைசேரி செயலாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே அறிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முழு நாடும் நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் பொது மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews