உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிவில் அமைப்புகளுடன் இணைந்து இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும், இதுவரை தேர்தலுக்கான நிதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இதனூடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews