அடுத்த வருட முற்பகுதியில் உள்ளாட்சிசபைத் தேர்தல்!

Provincial Council election 1

ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சிசபைத் தேர்தல் அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறும் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

2023 மார்ச் மாதத்துக்கு பிறகு, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஜனாதிபதி அண்மையில் அறிவுரை வழங்கினார் எனவும் அறியமுடிகின்றது.

இவ்வருடத்திலேயே உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. எனினும், பொருளாதார நெருக்கடியால் அது ஒத்திவைக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலை வழிநடத்தும் கட்சி பொறுப்பு நாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version