கால்நடைகள் உயிரிழப்பு – இறைச்சி தடை நீக்கம்

image 01c4c890f5

மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் இறைச்சி மற்றும் விலங்குகளை கொண்டு செல்வதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டிசெம்பர் 8, 9ஆம் திகதிகளில் கால்நடைகள் திடீரென உயிரிழந்ததையடுத்து, மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் எடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 10ஆம் திகதி தடைவிதித்திருந்தார்.

ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் எந்த நோய்த் தொற்றினாலும் கால்நடைகள் உயிரிழக்கவில்லை என்றும் குளிர் காரணமாகவே உயிரிழந்தாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இறைச்சி  மற்றும் விலங்குகளின் போக்குவரத்துக்கு நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version