லிட்ரோ காஸ் – மாவட்ட விலைப்பட்டியல் வெளியீடு

லிட்ரோ காஸ் நிறுவனம், சமையல் எரிவாயுவின் விலைகளை குறைத்துள்ளது.

அதனடிப்படையில், மாவட்ட மட்டங்களுக்கான விலைப்பட்டியலை அந்த நிறுவனம் ​வெளியிட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட காஸின் விலை கொழும்பு மாவட்டத்தில் 4,664 ரூபா. இதே நிறையுடைய காஸ் சிலிண்டரை, யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்யும் போது, 5,044 ரூபா செலுத்தவேண்டும்.

இதேவேளை, எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயுவுக்கான சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதியன்று காஸ் விலையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image 07e60d96b2

#SriLankanews

Exit mobile version