பயணத் தடையை நீக்கியது மலேசியா!

malay

マレーシア クアラルンプールの街並み

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை உடன் அமுலாகும் வகையில் மலேசியா நீக்கியுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மலேசிய குடியுரிமை அல்லது நீண்டகால விசாவை கொண்டுள்ளவர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மலேசியா பயணத் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version