புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூலக பேருந்து

யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூலக பேருந்தொன்று வழங்கப்பட்டது.

நூலக பேருந்து வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இப் பேருந்து வழங்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபையின் பழுதடைந்த பேருந்துகளை திருத்தி நூலகமாக மாற்றப்பட்டு பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறித்த பாடசாலைக்கு மாத்திரமே நூலகப் பேருந்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG 20220225 WA0042

#SriLankaNews

Exit mobile version