24 6615dfedc00cc
இலங்கைசெய்திகள்

புத்தாண்டு காலத்தில் விலை குறைவை சந்தித்துள்ள அலங்கார கீரை வகைகள்

Share

புத்தாண்டு காலத்தில் விலை குறைவை சந்தித்துள்ள அலங்கார கீரை வகைகள்

சுற்றுலா விடுதிகளில் உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் சாலாது உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளின் விலை கடந்த ஜனவரி மாதத்தை விட இந்த நாட்களில் பத்து மடங்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட ப்ரோக்கோலி 300ரூபாவாகவும், 3,000ரூபாவுக்குவிற்ற சிவப்பு முட்டைக்கோஸ் 200ரூபாவாகவும் , 1,500ரூபாவுக்கு விற்ற கீரை 50 ரூபாவாகவும், 1,800ரூபாவுக்கு விற்ற ஐஸ்பர்க் 150 ரூபாவாகவும் விலை குறைவடைந்துள்ளது.

இது தவிர 350 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கொத்தமல்லி 80 ரூபாவாகவும், 1700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு கீரையின் விலை 250 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

இவ்வகை கீரைகளின் கேள்வி அதிகமாக இருந்தாலும் சுற்றுலா ஹோட்டல்களுக்கான தேவை குறைவாகவே காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா நகரத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் இருந்து நாளொன்றுக்கு 2000 முதல் 3000 கிலோகிராம் வரையான சாலாது கீரைகள் தேவைப்படுவதாக நுவரெலியா(Nuwara Eliya) பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...

prison jail cell 2
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி சிறைச்சாலையில் இருந்து தப்ப முயன்ற கைதிகள்: அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் பரபரப்பு!

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் இன்று தப்பியோட முயன்ற நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள்...

Japanese woman Chat GPT
உலகம்செய்திகள்

நிச்சயதார்த்தத்தை இரத்து செய்துவிட்டு AI மணமகனைத் திருமணம் செய்த ஜப்பானியப் பெண்!

ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட...

கனமழை
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கிழக்கிலிருந்தான அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும்...