இரசாயன உரத் தடை – ஜனாதிபதிக்கு கடிதம்

Chemical fertilizer

இரசாயன உரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இரசாயன உரங்களுக்கு தடை விதிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த கடிதத்தில் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாய நடவடிக்கைகளுக்காக இராசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, நாட்டுக்குத் தேவையான சேதனப்பசளைகள் இன்றி விவசாயிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version