18 14
இலங்கைசெய்திகள்

மன்னார் சோழமண்டல குளம் காணி விவகாரம் : ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Share

மன்னார் சோழமண்டல குளம் காணி விவகாரம் : ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் (Mannar) சோழமண்டல குளம் காணியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் ஏழை விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதோடு பணம் படைத்தவர்களுக்கு குறித்த காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் (V.S Sivakaran) இன்றைய தினம்(17) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது “மன்னார் சோழமண்டல குளம் காணி விடயம் தொடர்பாக பல முறை உங்களுக்கு கடிதம் எழுதி பயனற்று போய்விட்டன.

30 ஆண்டுகளாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் 100 ஏழை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு பெரு வணிகர்களுக்கும் கொழும்பிலும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் சட்ட விரோதமாக காணி வழங்கி உள்ளீர்கள்.

நீதியின் பரிபாலன மின்றி அநீதியாக உங்கள் அமைச்சர்கள் சலுகை பெற்றுக் கொண்டு இக் காணியை வழங்கியுள்ளார்கள் என்பதே வெளிப்படையான உண்மை.

இவ்விடயம் தொடர்பில் அரசாங்க அதிபர் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார் அத்தோடு இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பல தடவைகள் எழுத்து மூலமும் நேரடியாகவும் தெரிவித்துவிட்டனர்.

இதற்காக பல கூட்டங்களும் நடந்தேறிவிட்டது ஆனால் எங்கும் நீதி கிடைக்கவில்லை அத்தோடு ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான காணியை அபகரித்தது அடிப்படை உரிமை மீறலாகும்.

வாழ்வுரிமையின் அடிப்படை உரிமை மறுக்கும் இந்த நாட்டின் நீதியற்ற நிர்வாக இயலின் ஜனாதிபதி தேர்தலை முழுமையாக புறக்கணிக்கிறோம் எந்த வேட்பாளருக்கும் நாம் வாக்களிக்க தயாராக இல்லை.

எமது அடிப்படை உரிமையை பெற முடியாத இந்த நாட்டில் குடியிருந்து என்ன பயன் ? இந்த நூறு குடும்பங்களின் வாழ்வுரிமையை மறுக்கும் தங்களின் அரசு இவர்களை இந்நாட்டிலிருந்து நாடு கடத்தி விடுங்கள்.

சமநீதி சமத்துவம் சமூக நீதி அடிப்படை வாழ்வுரிமை இல்லாத நாட்டில் வசித்து என்ன பயன் ? பணம் உள்ளவர்கள் மட்டுமே வாழலாம்.

அவர்களுக்கு மட்டுமே இந்த அரசு சகல விடயங்களிலும் முன்னுரிமை வழங்குகின்றது தமிழ் மக்களின் இனப் பிரச்சனை தீர்வு மட்டுமல்ல அடிப்படைப் பிரச்சனையும் புறக்கணிக்கும் தாங்கள் எப்படி பல்வகைமைச் சமூகத்தின் தலைவராக மிளிர்ந்து விட முடியும்.

இந்த நாட்டிலே ஏதிலிகள் குடியிருந்து என்ன பயன் ? அவர்களின் உரிமைகளை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சகல வழிகளிலும் நசுக்கி வருகிறீர்கள்.

எனவே உடனடியாக தேர்தலுக்கு முன்னதாகவே இந்த காணி பிரச்சனையை தீர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

உலகிற்கு ஜனநாயகமும் மற்றும் சமத்துவமும் பற்றி புத்தி புகட்டும் தாங்கள் உள்நாட்டில் சாமானியனின் ஜனநாயகத்திற்கு சாவு மணி அடிப்பதுதான் நடு நிலையான ஆட்சியா? நல்லாட்சி என்பது பாதிக்கப்பட்டவன் பக்கம் நிற்பதே முதலாளித்துவத்திற்கு ஆதரவான அரசு பாட்டாளிவர்க்கத்தின் விரோதியே ! எனவே இப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் இல்லையேல் வரும் ஜனாதிபதி தேர்தலை நாம் முழுமையாக புறக்கணிப்போம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...