உரிய நேரத்தில் அஸ்திரங்களை ஏவுவோம்! – சஜித்தின் முடிவு சரியானதே என்கிறார் மனோ

Manoganeshan

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாமல் அமையும் சர்வக்கட்சி அரசில், அங்கம் வகிக்காமல் இருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவுடன் நாம் உடன்படுகின்றோம்.”- இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனினும், ஜனாதிபதியை பாதுகாத்துக்கொண்டு, எமது முதுகில் ஏறி அரசியல் செய்வதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்படும்.

எங்களிடம் அரசியல் அஸ்திரங்கள் உள்ளன. உரிய நேரத்தில் அவை ஏவப்படும். தற்போது அவசரப்படமாட்டோம். பாத யாத்திரை முடிந்த பிறகு, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பிரேரணைகள் கையளிக்கப்படும்.” – என்றார் .

#SriLankaNews

Exit mobile version