” ஆட்சியாளர்களால் உகண்டா, சீசல்ஸ் உட்பட சில நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்க வேண்டும். அதனை செய்யக்கூடிய வல்லமை, ஊழல், மோசடிகளுடன் தொடர்பற்ற எமக்கே இருக்கின்றது.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
” மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்” – என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (17) முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது.
இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய மக்கள் சக்தியால் ஊழல் அற்ற ஆட்சி கட்டியெழுப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
#SriLankaNews