சர்வக்கட்சியில் இணையோம்! – ஹர்சன ராஜகருண

download 8

தமது கட்சி உறுப்பினர்கள் சர்வக்கட்சி அரசில் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உட்பட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வக்கட்சி அரசில் இணையவுள்ளனர் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண,

” எமது கட்சியில் சில கறுப்பாடுகள் இருந்தன. அவை வெளியேறிவிட்டன. எனவே, சர்வக்கட்சி அரசு என்ற பொறிக்குள் சிக்குவதற்கு எவரும் தயாரில்லை. எமது கட்சிக்கு எதிராக சேறு பூசும் விதத்தில் தவறான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version