நாளை நடைபெறவுள்ள பொது முடக்கத்துக்கு ஆதரவாய் அணி சேர்வோம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!

20220102 111815

நாளை நடைபெறவுள்ள பொது முடக்கத்துக்கு ஆதரவாய் அணி சேர்வோம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில்,

தமிழ் மக்கள் தமது இருப்பினைத் தக்கவைப்பதற்காக எல்லாவழிகளிலும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலச்சூழலில், தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பை மேலும் கேள்விக்கு உட்படுத்தும் வகையில் சிங்கள இனவாத அரசும் அதனுடன் இணைந்த அரச திணைக்களங்களும் திட்டமிட்டு மேற்கொள்ளும் இன, மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியதும், எமது மக்கள் தமது நியாயமான எதிர்ப்பைப் பதிவுசெய்வதற்கான கருத்துச் சுதந்திரத்தைக் கூட பறிக்கும் சரத்துக்களை உள்ளடக்கியுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ள நிலையில், இவ்விரு கோரிக்கைகளையும் பிரதானமாக முன்னிறுத்தி மேற்கொள்ளப்படவுள்ள இப் போராட்டத்திற்கு எனது முழுமையான பூரண ஆதரவை வழங்கும் அதேவேளை, இன, மொழி, பிரதேச வேறுபாடுகளற்று அனைவரும் இதற்கு ஆதரவளிக்க முன்வர வேண்டுமென்றும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன் – என்றுள்ளது.

#SriLankaNews

Exit mobile version