தியாகதீபத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவோம்!

20220919 160023

எந்த நோக்கத்திற்காக தியாகதீபம் திலீபன் தன்னுடைய உயிரை தியாகம் செய்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான ஒரு தளமாக இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே குடும்பமாக இணைந்து எவ்வாறு சிறப்பாக நினைவேந்தலை செய்வது பற்றிய ஒரு கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. அந்த நினைவுகூரலை செய்வதற்கான ஏற்பாட்டு குழுவினை தேர்வுசெய்து இருக்கிறோம்.

ஏற்பாட்டுக்குழுவில் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழுவினை இன்று ஏற்படுத்தி இருக்கின்றோம்.

எந்த நோக்கத்திற்காக அவர் தன்னுடைய உயிரை தியாகம் செய்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான ஒரு தளமாக இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version