வடக்கு, கிழக்கு உட்பட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு நாளை முதல் லீவு!

a

நாளை முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

 

Exit mobile version