அரசுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழ். நகர் பகுதியில் இன்று துண்டுப்பிரசுர விநியோகம் செய்யப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்தத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் யாழ். நகருக்கு வருகை தந்தவர்களுக்கும் இந்தத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
#SriLankaNews
Leave a comment