7 48
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சியின் தலைவர் நான் தான் – மாவை அதிரடி அறிவிப்பு

Share

தமிழரசுக் கட்சியின் தலைவர் நான் தான் – மாவை அதிரடி அறிவிப்பு

லங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில் இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் தேவையற்றது என்று மாவை சேனாதிராஜா ( Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.

கட்சியின் பதில் பொதுச்செயலாளராகச் செயற்பட்டு வரும் ப.சத்தியலிங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மாவை அனுப்பி வைத்த கடிதத்தின், சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரின் பதவி வெற்றிடமான போது, கட்சியின் தலைவரான எனது பரிந்துரையின் அடிப்படையில் பதில் பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

கட்சியின் பதில் பொதுச்செயலாளர் கட்சித் தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பட வேண்டும் என்று யாப்பு கூறுகின்றது. ஆனால், கட்சியின் பதில் பொதுச்செயலாளரான மருத்துவ கலாநிதி சத்தியலிங்கம் எனது ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை.

அத்துடன், டிசம்பர் மாதம் 14ஆம் திகதி கூட்டப்பட்ட கூட்டம் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை.

அந்தக் கூட்டம் தன்னிச்சையாகக் கூட்டப்பட்ட கூட்டம் என்பதுடன், எதிர்வரும் 28ஆம் திகதிய கூட்டத்தின் (இன்றைய) நிகழ்ச்சி நிரல் (மாவையின் பதவி விலகல் தொடர்பான வாக்கெடுப்பு) தேவையற்றதொன்று.

வாக்கெடுப்பு நடத்தி தலைவர் பதவியைத் தீர்மானிப்பது என்பது அடிப்படை அற்ற முன்னெடுப்பாகும். 2024ஆம் ஆண்டின் பொதுத்தேர்தல் அறிக்கையைக் கட்சித் தலைமையகத்தில் வைத்து நானே தயாரித்தேன்.

அந்த அறிக்கை எனது இல்லத்தில் வைத்தே, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன், பதில் பொதுச்செயலாளர்கள் மற்றும் ம.ஆ.சுமந்திரன், ஆனோல்ட் முன்னிலையில் ஊடகங்களுக்கு வெளியிட்டோம்.

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நான் அறிவித்தபோது, சிறீதரனைத் தலைமைப் பதவியை ஏற்குமாறு கோரியிருந்தேன்.

அது செயற்படுத்தப்படாமையால், நானே கட்சித் தலைவராகத் தொடர்கின்றேன். அத்துடன், பதவி விலகல் கடிதத்தை நான் எழுதிய பின்னர் கூட்டப்பட்ட கூட்டங்கள் சிலவற்றில் கட்சித் தலைவர் என்ற ரீதியிலேயே எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றுள்ளது

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...