இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை உயர்வு

Share
rtjy 45 scaled
Share

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை உயர்வு

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையையும் உயர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 3,835 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1535 ரூபாவாகும்.

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று காலை அதிகரிப்பட்டது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையானது 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 3,127 ரூபாவாகும்.

5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 58 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 1,256 ரூபாவாகும்.

அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 26 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 587 ரூபாவாகும். இன்று (04.09.2023) நள்ளிவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...