அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

17512685620

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனை சந்தித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது. சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சாதாரணமாகவே, அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்கும் ரஹ்மான் தற்பொழுது இணை அமைச்சரை சந்தித்திருப்பது ரசிகர்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனுடன் சம்மந்தப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த சந்திப்பின் பின்னணியில், அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர். எனினும் இந்த சந்திப்பு குறித்த விளக்கம் எதுவும் இரு தரப்பில் இருந்தும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version