tamilni 81 scaled
இலங்கைசெய்திகள்

மீண்டும் மின் கட்டணத்தை பாரிய அளவு அதிகரிக்க கோரிக்கை

Share

மீண்டும் மின் கட்டணத்தை பாரிய அளவு அதிகரிக்க கோரிக்கை

மின்சாரக் கட்டணத்தை 32% ஆல் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தி உள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஐம்பத்து நான்கு பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உத்தேச கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டால், ஒரு வருடத்திற்குள் கட்டணங்கள் 200% க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.

கடும் வரட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதால் 3500 மெகாவாட் மின்சார உற்பத்தி கடும் நெருக்கடியை சந்திக்கலாம் என்பதால் மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் 42 ரூபா தொகை 56 ரூபாவாக அதிகரிக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டால், ஒரு வருடத்திற்குள் கட்டணங்கள் 200%க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பிரேரணைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோருவதாக அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மீண்டும் இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்த நேற்று முன்மொழிந்துள்ளது.

ஆண்டுக்கு இருமுறை மின் கட்டணம் உயர்த்தப்படும் என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மூன்றாவது முறையாக அதிகரிக்க முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது.

இந்த ஆண்டு நான்காவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிறைவேற்றுவதற்காகவும், மின் கட்டணம் 56% உயர்த்தப்படுகிறது. இந்த முன்மொழிவு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் பெறப்படும்.

இதை நிராகரிக்கிறோம் என்கிறோம். இது சட்டத்திற்கு எதிரானது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், இந்த ஆண்டு மின் கட்டணம் 200% அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்திருப்பதால் அனல் மின் நிலையங்களிலிருந்தும் மின்சாரத்தைப் பெற வேண்டியிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...