17 12
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Share

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நேற்று (14) மாலை 4.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டம் – யக்கலமுல்ல, நியாகம, இமதுவ, களுத்துறை மாவட்டம் – பேருவளை, கேகாலை மாவட்டம் – கலிகமுவ, குருநாகல் மாவட்டம் – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ, நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்த, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 1ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மாவட்டம் – சீதாவக, பாதுக்கை, களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்த, காலி மாவட்டம் – அல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட, வந்துரம்ப, தவளம், கம்பஹா மாவட்டம் – அத்தனகல்லை, கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்லை, அரநாயக்க, தெரணியகலை, இரத்தினபுரி மாவட்டம் – அஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...