3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

image 6124b9aa82

தற்போது நிலவும் கடும் மழை காரணமாகநாட்டின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version