திருகோணமலையில் இந்தியா வசமாகும் பல நூறு ஏக்கர் காணிகள்!

tamilni 394

திருகோணமலையில் இந்தியா வசமாகும் பல நூறு ஏக்கர் காணிகள்!

திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தினை போன்ற ஒரு பிரதேசத்தினையே இவ்வாறு விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போது திருகோணமலையில் அந்தந்த காணிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பிரதேசத்தில் உள்ள 35,000 குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version