யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த 6 பேர் இன்றைய தினம் பொலிஸாரிடம் சரண் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு வேளையில் நடத்தப்பட்ட இந்த வாள்வெட்டு சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
படுகாயமடைந்து உயிரிழந்த இளைஞனை திட்டமிட்டு தந்திரமாக அழைத்து வாள்வெட்டு நடத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கெமி என அழைக்கப்படும் குழுவினரே தமது மனைவி பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியிருந்தனர்.
இந்த நிலையில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்கள் தலைமறைவாக முயன்றும் இனி தப்ப முடியாதென்ற நிலையில், சட்டத்தரணி ஒருவர் ஊடாக 6 பேர் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment