யாழில் சிக்கியது குண்டூசி பாண்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய தினம், குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார்.

அந்த பாணை வீட்டுக்கு கொண்டு சென்று தமது பிள்ளைகளுக்கு வழங்கிய போதே, பாண் ஒன்றினுள் மூன்று குண்டூசிகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

image 1c5b759bab

#SriLankaNews

Exit mobile version