கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நியமனம்!

கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 355 ஆசிரியர்களுக்கான நியமனங்களை வடக்கு மாகாண பிரதம செயலாளர் R. சுமன் பந்துலசேன வழங்கி வைத்தார்.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் தலைவர் எஸ்.பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு பாடவிதானங்களை கொண்ட ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

விவசாயம், கலை விஞ்ஞானம், கணிதம் ஆங்கிலம் மற்றும் சமயம் உள்ளிட்ட 18 வகையான பாடவிதானங்களை கற்பிக்கும் 355 டிப்ளோமா ஆசிரியர் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரர் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் மற்றும் கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2022 04 29 at 12.41.00 PM 1

#SriLankaNews

Exit mobile version