rtjy 133 scaled
இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்

Share

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மனித எச்சங்களின் அகழ்வு பணிகள் கடந்த 06.09.23 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அகழ்வு பணியின் ஐந்தாவது நாளான (11.09.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவர், மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும், ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடற்பாகங்களுடன் ஐந்து உடற்பாகங்கள் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

13 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் குறித்த புதை குழியில் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக உடலங்கள் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும், மிக மிக நெருக்கமாக பல மனித எலும்பு கூட்டு தொகுதிகள் காணப்படுகின்றன எனவும் அகழ்வு பணி தொடங்கியதில் இருந்து இதுவரை ஐந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

நேற்று எடுக்கப்பட்ட மனித எச்சத்தில் துப்பாக்கிச் சன்னம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...