இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயமானது, 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக விசேட நிழ்வினை ஓழுங்குபடுத்தியுள்ளது.
நிலைபேறான எதிர்காலத்திற்காக இன்றே பால்நிலை சமத்துவத்திற்காக பாடுபடுவோம்எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 09.3.2022 அன்று முற்பகல் 9.30 மணியிலிருந்து 12.30 வரை கிளிநொச்சியில் நடாத்த தீர்மானித்துள்ளது.
இந்நிகழ்வானது கிளிநொச்சி – கரைச்சிப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது மேற்படி தலைப்பு தொடர்பில் துறை சார்ந்தவர்களின் சொற்பொழிவும் கருத்துப் பரிமாறல்களும் இடம்பெறவுள்ளன.
எனவே இந்நிகழ்விற்கு அனைவரது ஆதரவையும் தந்துதவுமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews