download 3 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து சித்திரவதை!

Share

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத் விஷாந்த கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று முன்னெடுத்தனர்.

வவுனியா பூவரசம்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய தில்லைநாதன் சுமணன் என்பவர் வெளிநாடு அனுப்புவதாக கூறி வேலணையைச் சேர்ந்த நபர்களிடம் 10 லட்சம் ரூபா பணத்தை வாங்கியுள்ளார்.

எனினும் நீண்ட நாள்களாக வெளிநாடு அனுப்புவதற்கான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை.

அவருக்கு பணம் கொடுத்தமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் ஆதரத்தை உருவாக்குவதற்காக குறித்த நபரை கடத்தி வந்துள்ளனர்.

நேற்றுக் காலை முச்சக்கரவண்டி வாடகைக்கு வேண்டும் என்று கூறி இரண்டு இளம் பெண்கள் அவரை வரவழைத்துள்ளனர்.

அவர்கள் அழைத்த இடத்துக்குச் சென்ற போது முச்சக்கர வண்டியை அங்கு கைவிட்டு 10 பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து ஹஏஎஸ் வானின் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வந்துள்ளது.

கொக்குவில் தாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி 10 லட்சம் தர வேண்டும் என்ற கடிதம் ஒன்றை எழுதி வாங்கியுள்ளது அந்தக் கும்பல்.

நபர் ஒருவர் கடத்தி வரப்பட்டு சித்திரவதை இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூரின் கட்டளைக்கு இணங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிருந்து அந்தக் கும்பல் வானில் மன்னார் செல்ல முற்பட்டுள்ளது. கும்பல் பயணித்த வான் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸின் உதவியுடன் வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...