மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு!

3c322545 30b25ef6 kanchana wijeskera 850x460 acf cropped 1

மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில்,

கச்சா எண்ணெய் கப்பல் எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததும். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 15 ஆம் திகதி முதல் இயங்கத் தொடங்கும். 19 ஆம் திகதி முதல் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட துறைகளுக்கு மண்ணெண்ணை தொடர்ந்து விநியோகிக்கப்படும்.

மண்ணெண்ணெய் 87 ரூபாயிலிருந்து, விலையை மாற்றியமைப்பதில் தற்போது அரசின் கவனம் உள்ளது.

மீனவர்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களை இலக்காகக் கொண்டு மண்ணெண்ணெய் வழங்குவதற்கு தனியான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மண்ணெண்ணெய் வழங்கும் போது மீனவர்களுக்கு செல்லாமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. தனியார் பஸ்களில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. எனவே அது தவிர்க்கப்பட வேண்டும் – என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version