tamilni 302 scaled
இலங்கைசெய்திகள்

குடும்பத்துடன் நாடு திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

Share

குடும்பத்துடன் நாடு திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

திருகோணமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு போதைப்பொருள் வழங்கிய நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது குடும்பத்துடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று இலங்கை திரும்பிய போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு, பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவராகும்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...