விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி

24 663d89cb83ba1

விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க ஜெல் கையிருப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் கையிருப்பின் மொத்த எடை ஒரு கிலோ 975 கிராம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தனது காலணி மற்றும் உள்ளாடைகளில் மறைத்து மூன்று பொதிகளில் தங்க கையிருப்பை கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த பயணியை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிவலி அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version