காரைநகர் பிரதேச சபை கூட்டமைப்பு வசம்

received 474836184177896

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தவிசாளராக இருந்த சுயேட்சை குழு உறுப்பினர் மயிலன் அப்பாத்துரை தனது பதவியை இராஜினாமா செய்தமையால் , தவிசாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.

புதிய தவிசாளர் தெரிவு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

அதன் போது , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளினதும் தலா இரு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும் , சுயேட்சை குழுவை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 7 உறுப்பினர்கள் சபைக்கு சமூகம் அளித்தனர்.

அதனை தொடர்ந்து தவிசாளர் தெரிவு ஆரம்பமான போது ,, கூட்டமைப்பின் உறுப்பினர் விஜயராசா , சக உறுப்பினர் க. பாலச்சந்திரனை தவிசாளராக முன்மொழிந்தார். அவருக்கு எதிராக வேறு பெயர்கள் பிரேரிக்கப்படாமையால் பாலச்சந்திரன் போட்டியின்றி ஏக மனதாக தவிசாளராக தெரிவிவானார்.

#SriLankaNews

Exit mobile version