1 16
இலங்கைசெய்திகள்

காங்கேசன்துறை- நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Share

காங்கேசன்துறை- நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த கப்பல் சேவையானது நாளை மறுதினம் (12.02.2025)ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், நாளை மறுதினம் (12) காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

இந்த கப்பல் சேவையானது செவ்வாய்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் போக்குவரத்துக்கான பயணச்சீட்டுக்களை www.sailsubham.com என்ற இணையதளத்தின் மூலமாக அல்லது 021 2224647, 0117642117 இலக்கத்தினூடாகவும் முற்பதிவு செய்து கொள்ளுமாறும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
IMG 20251018 WA00431 vb 16
செய்திகள்இந்தியா

கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு நிவாரணம் அனுப்பிய விஜய்! 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்டத்தில்...

25 68f5bd64c9d96
செய்திகள்இலங்கை

ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்று இரவு இலங்கை வான்பரப்பில் காண வாய்ப்பு!

இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு...

25 68f59693a092d
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக...

6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...