காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் மீண்டும் சேவையில்

300181361 2207102769449781 4830722724823407415 n

ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை /கொழும்பு இரவு தபால் புகையிரதம் நாளை 19.08.2022 முதல் சேவையில் தினமும் சேவையில் ஈடுபடும்.

நாளை இரவு கொழும்பில் இரவு 8மணிக்கு புறப்படும் புகையிரதம் வவுனியாவை அதிகாலை 01.39க்கு வந்தடைந்து யாழ்ப்பாணம் 04.39 , காங்கேசன்துறையை 05.19க்கு சென்றடையும்.

அதேபோல் 20.08.2022 காங்கேசன்துறையில் இருந்து 18.00க்கும், யாழ்ப்பாணதில் இருந்து 18.45க்கும் புறப்படும் இப்புகையிரதம் வவுனியாவை இரவு 21.51 க்கு வந்தடைந்து அதிகாலை 04.00க்கு கொழும்பை சென்றடையும்.

இப்புகையிரத்தில் 1ம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2ம் வகுப்பு ஒதுக்கப்பட்ட பெட்டி, 2ம் வகுப்பு சாதாரண பெட்டி, 3ம் வகுப்பு ஒதுக்கப்பட்ட பெட்டி, 3ம் வகுப்பு சாதாரண பெட்டிகள் காணப்படுவதோடு இந்தியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட M11 என்ஜின், ICF பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடும்.

கட்டண விபரங்கள்.

1ம் வகுப்பு (குளிரூட்டப்பட்டது) – 3200/-
2ம் வகுப்பு (ஒதுக்கப்பட்டது) – 2200/-
3ம் வகுப்பு (ஒதுக்கப்பட்டது) – 1800/-
(காங்கேசன்துறை/வவுனியா/கொழும்பு)

இது தவிர ஒவ்வொரு வெள்ளிகிழமைகளில் இரவு 10.00 க்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறை இருந்து இரவு 10.00 க்கு புறப்படும் முற்றாக குளிரூட்டப்பட்ட புகையிரதமும் சேவையில் ஈடுபடும்.

ரயில் இருக்கைகளுக்கான ஒதுக்கீடுகளை முன்பதிவு வசதியுள்ள புகையிரத நிலையங்களில் மேற்கொள்ள முடியும். இல்லாவிடின் நீங்கள் இருந்த இடத்திலேயே மேற்கொள்ளலாம். மிக எளிமையான முறையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த செயலியை (Srilanka Railways Reservation App) உங்கள் கைப்பேசிகளில் நிறுவி ரயில் இருக்கை ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம்.

அது தவிர டயலொக் மூலமாக 444, மொபிடெல் மூலமாக 365 க்கு அழைத்தும் , இணையத்தில் https://seatreservation.railway.gov.lk மூலமாக சென்றும் ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியும்.

#SriLankaNews

Exit mobile version