tamilni 366 scaled
இலங்கைசெய்திகள்

கண்டி பெரஹராவுக்குள வாளுடன் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்

Share

கண்டி பெரஹராவுக்குள வாளுடன் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்

கண்டி பெரஹரா ஊர்வலம் சென்ற வீதிக்குள் பயணப் பையில் வாள் ஒன்றை மறைத்துக்கொண்டு நுழைய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி, ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சந்தேகநபர் இந்த வாளை ஒரு பையில் எடுத்துச் சென்றதை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், எதற்காக வாளை எடுத்து வந்தீர்கள் என வினவியபோது, ​​சந்தேகநபர் நண்பர் ஒருவர் இதனை தலந்தாவுக்கு காணிக்கையாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
1759803512
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான யாழ்ப்பாண யுவதி தற்கொலை முயற்சி; சிகிச்சை பலனளிக்காமல் மரணம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற...

image cb0f8da672
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ தென் கொரியாவில் துணை சபாநாயகரைச் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்!

தென் கொரியாவுக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

1 32 1
செய்திகள்உலகம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு...

images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...