கடைகளுக்குள் புகுந்த கண்டர் வாகனம்! – இருவர் மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த கண்டர் ரக வாகனம் இரண்டு கடைகளை மோதித் தள்ளியது.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி அதிகாலை இறைச்சி கோழிகளை ஏற்றியவாறு பயணித்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென காற்று போனதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள டயர் கடை மற்றும் தேங்காய் விற்பனை செய்யும் கடை ஆகியவற்றின் தொட்டிகள் மதிச்சுவர்கள் என்பவற்றை மோதித் தள்ளி கண்டர் வாகனமும் முற்றாக சேதமடைந்தது.

இதன்போது குறித்த வாகனத்தில் பயணம் செய்த சாரதியின் உதவியாளர்கள் இருவர் கைகள் மற்றும் தலைகளில் காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கடையினுள் புகுந்த வாகனத்தினை பிரதேசவாசிகள் மீட்டனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

IMG 20230413 WA0002

#SriLankaNews

Exit mobile version