ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கந்தானை உப ரயில் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கந்தானை உப ரயில் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிருமி நீக்கம் செய்த பின்னர் ரயில் நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews