நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் அமர்வதற்கு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இவ்விருவரும் எதிரணியில் அமர்வார்கள் என தெரியவருகின்றது.
அத்துடன், சுயாதீன அணியொன்றை உருவாக்கி, சபைக்குள் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பிலும் தற்போது ஆலோசனை நடத்திவருகின்றனர்.
#SriLankaNews