தென்னிலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த ஆறு வயது சிறுவன்

tamilni 118

களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலவத்த நெலுவ வீதியில் தேயிலை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் வீழ்ந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவித்தனர்.

யட்டபான 9 மைல்கல் பகுதியில் வசிக்கும் ஆதித்ய புன்சர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

பெலவத்தையில் இருந்து தினியாவல நோக்கி பயணித்த லொறி யட்டபாத 9 மைல்கல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் மெகதன்ன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version